Sunday, November 29, 2009

முல்லாவின் கதைகள்

கடன் வாங்கிய ஏழை


முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். "ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று முல்லா மிகவும் உருக்கமாகக் கூறினார்.

அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து "அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். "வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள் முல்லா அப்பணக்காரரிடம் வந்தார். "யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்நிருகின்றீராக்கும்" என்றார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் முல்லா.

"அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார். "இல்லை உண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான்" என்றார் முல்லா. "உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் 'நான்தான் அந்த ஏழை' என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்" என்று செல்வந்தர் கேட்டார். "நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன்" என்றார் முல்லா.

பிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். " நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? " என்று கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்று அந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். " என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார். " நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார்.



முல்லாவின் கதைகள்

நம்பிகை துரோகம்


ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.

முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் "முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?" என்று கேட்டான். "நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.

நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என்றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்." என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினைக் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசினை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். "முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்



என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்" என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான்.


முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அதனை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறிந்துகொண்டு நின்றான். "என்ன சமாச்சாரம்...?" என்று கேட்டார் முல்லா. "ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அதனையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்." என்றான் டம்பன்.
உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது" என்று கோபமாகக் சொன்னார் முல்லா.

"
முதலில் நான் வாங்கிய ஒரகாசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே" என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். "நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்" என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் " முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பிக்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்" என்றான்.

"
நம்பிக்ககைத் துரோகம் தான் செய்துவிட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பிக்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது" என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

Friday, November 27, 2009

தெனாலி ராமன் கதைகள்

கூனனை ஏமாற்றிய கதை


ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.
ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.
"
கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.
ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.
தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது.
"
அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.
"
யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.
இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.
"
அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.
கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.
யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர். mgvs