
Wednesday, December 30, 2009
Friday, December 4, 2009
என் பாட்டி சொன்ன கதை
பாட்டி வடை சுட்ட கதை ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி , வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து "காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு" என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது. கதையின் மாறுபட்ட வடிவங்கள் இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும். இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது 1 . பாட சொன்ன நரியிடம் காக்கா தன் வடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.! 2 .நரி கேட்டது...அழகாகப் பாட்டுப்பாடினாய் இனி ஒரு நடனம் ஆடு என்று..காகம் மீண்டும் வடையை வாயில் வைத்துக் கொண்டு நடனம் ஆடியது. நரி மீண்டும் ஏமாந்தது. 3.நரி யோசித்துவிட்டு....பாட்டும் பாடினாய்..ஆடியும் காட்டினாய், அற்புதம்...இனி ஆடலுடன் பாடலும் பாடி...ஒரு நாடகம் நடி பார்க்கலாம் என்று கேட்டது. காகம் மீண்டும் வடையைக் காலில் வைத்துக் கொண்டு,,நான் பாடினேன் ஆடினேன்...நாடகம் நடிப்பதற்கு சக்தி வேண்டும் இந்த வடையை சாப்பிட்ட பின்னர் நடித்துக் காட்டுகிறேன் நண்பனே என்றது. நரி மீண்டும் ஏமாறியது
Thursday, December 3, 2009
Wednesday, December 2, 2009
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்





